வெளிநாடுகளிடமிருந்து டொலர்களை பெற்றுக்கொண்டவர்களே கிறீஸ் பூதம் என்ற கட்டுக்கதைகளை பரப்பி வருவதாகவும் மர்மமனிதன் என்று யாரும் இல்லை என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பூஜித ஜெயசுந்தர இன்று மட்டக்களப்பில் தெரிவித்தார்.
இந்த நாட்டில் கொடிய யுத்தத்தை நடாத்திக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தார்கள் ஆனால் அவர்கள் தற்போது அழிக்கப்பட்டுள்ளனர் தற்போது புதிதாக கிறீஸ் மனிதன் ஒன்றினைப் புகுத்தியுள்ளார்கள் அவன் யார் எங்கு இருக்கின்றான் என யாருக்கும் தெரியாது. இது சிங்கள காடையர்களால் செய்யப்படுகின்றது தமிழ் முஸ்லிம் உறவைக் குலைப்பதற்காகச் செய்யப்படுகின்றது என பலர் கூறுகின்றார்கள். இவையெல்லாம் அப்பட்டமான பொய் பிரச்சாரங்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பூஜித ஜெயசுந்தர இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு தேவவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற கிறீஸ் பூதம் தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் கூறினார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில். பிரபாகரன் செய்த கொடிய யுத்தம் தற்போது வெல்லப்பட்டுள்ளது தற்போது மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றார்கள் இப்படி இருக்கையில் புதியதொரு கிறீஸ் பூதம் ஒன்றினைக் கட்டி விட்டு மக்களை ஏமாற்றி பயமுறுத்துகிறார்கள. இவை சட்ட விரேதமாக ஆயுங்களை வைத்திருப்பவர்கள் மேற்கொள்ளலாம் சட்டவிரோத மான ஆயுதம் வைத்திருப்பவர்களுக்கு அதனை ஒப்படைப்பதற்கு தற்போது கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களை யாரும் அனுமதிக்கமாட்டார்கள் இவைகள் அனைத்தும் அப்பட்டமான பொய் வதந்திகள் எனக்கு ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் பணித்ததின் பேரில் நான் இந்த கிறிஸ் மனிதன் சம்மந்தமாக விளக்கமளிப்பதற்கு மட்டக்களப்புக்கு வந்துள்ளேன். இதனை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் பிரிவுகளிலுமுள்ள பொதுமக்கள் அரச அதிகாரிகளுக்கும் விளக்கமளிக்கவுள்ளேன்.
இந்நிகழ்வில் கிழக்குமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் விஜயகுணவர்த்தன, மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர கரவிட்ட மற்றும் மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் மண்முனைவடக்கு பிரதேச செயலாளர் விசேட அதிரடிப்படை உயர் அதிகாரிகள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மதத்தலைவர்கள் வர்த்தக சங்கத்தினர் சிவில்; அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்






0 comments:
கருத்துரையிடுக