அட்டாளைச்சேனை 3 ஆம் பிரிவு ஆர்.டீ.எஸ். வீதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலீஸார் தெரிவித்தனர். முனீர் றுஸ்னியா என்ற 32 வயது குடும்பப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் வியாழக்கிழமை காலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் மரண விசாரனையை மேற்கொண்ட அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி ரீ.சுரவணராஜா பிரதே பரிசோதணையின் பின் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






0 comments:
கருத்துரையிடுக