கிழக்கு பிரதேசங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் கடந்த காலங்களில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கையடக்கத் தொலைபேசி தகவல்கள் தொடர்பில் விசேட பரிசோதனை ஒன்று நடாத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினர் தீரமானித்துள்ளனர். கிறிஸ் பூதங்கள் தொடர்பில் எழுந்த கதைகள் இலங்கை பூராகவும் பரவத் தொடங்கியதையடுத்து கையடக்கத் தொலைபேசிகள் மூலமாக அதிகளவான அழைப்புகள் பரிமாற்றப்பட்டுள்ளதாக கதிர்வீச்சலை நிலையங்களில் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் விசேட பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு தரப்பு தீர்மானித்துள்ளது. அத்தோடு இரண்டு அடிப்படை தர்மவாத இயக்கங்கள் தொடர்பிலும் பாதுகாப்பு தரப்பினர் பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்விரண்டு அடிப்படை தர்மவாத இயக்கங்கள் கடந்த காலங்களில் மிகவும் பரந்தளவில் செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 comments:
கருத்துரையிடுக