அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

சனி, 6 ஆகஸ்ட், 2011

இரவுநேர ரயிலில் நடப்பது என்ன?


இரவுநேர ரயில் பயணங்களில் நடப்பது என்ன?

- முஹம்மட் பிறவ்ஸ்

பயணம் மரணம் இரண்டையும் நம் வாழ்நாளில் எப்படியாவது சந்தித்தேயாக வேண்டியிருக்கிறது. நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு பல இடங்களுக்கும் பயணிக்க நேரிடுகிறது. ஒவ்வொரு பயணமும் எமக்கு ஒவ்வொரு அனுபவத்தைத் தருகின்றது. அதிலும் ரயில் பயணங்கள் சுவாரஷ்யத்தைத் தருவதோடு படிப்பினைகளையும் தருகின்றன என்பதில் ஐயமில்லை. தலைநகரில் கடமைபுரிபவர்கள் வார இறுதி நாட்களை தங்களது குடும்பத்துடன் கழிப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவே தலைநகரிலிருந்து புறப்பட்டுவிடுகின்றனர். விடுமுறையில் வீடு செல்வர்களும் வேறு தேவைகளுக்காகச் செல்பவர்களும். தூங்கிக்கொண்டே பயணிக்கலாம் என்ற நப்பாசையில் இரவுநேர ரயில் பயணங்களையே அதிகமக நாடுகின்றனர்.
இப்பொழுது நாட்டில் சுமூகமான சூழ்நிலை நிலவுவதால் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களிலே அதிகமான கூட்டம் நிரம்பி வழிவதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. கொழும்பு கோட்டையிலிருந்து  மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வவுனியா நோக்கிச்செல்லும் புகையிரதங்களில் எடுத்துக்கொண்டால் மிகவும் சனநெருக்கடியாக இருக்கும். சிலவேளைகளில் நிற்பதற்குக்கூட கஷ்டமாக இருக்கும். மூன்றாம் வகுப்பு ஆசனச் சீட்டைப் பெற்றுக்கொண்டவர்கள் ஒருவாறு முண்டியடித்துக் கொண்டும் சண்டை பிடித்துக் கொண்டும் தங்களது ஆசனத்தைப் பிடித்துக்கொள்வார்கள். உண்மையிலேயே இரவுநேர ரயில் பயணங்கள் திருப்தியளிக்கின்றனவா? அங்கு நடப்பது என்ன என்று அதில் பயணித்த அனுபவம் உள்ளவர்களுக்குத்தான் தெரியும்.


ரயில் பயணத்தில் நடக்கும் சில சம்பவங்கள் வெளியில் வருவது அரிது. காரணம் பாதிக்கப்படபவர்கள் வெளியில் சொல்ல பயப்படுவதே. இதனால் தமக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ அல்லது தமது பெயர் கெட்டுவிடுமோ எனப் பலவாறாகப் பயப்படடுவதால்தான் சமூகத்தில் நுகர்வோருக்கு ஏற்படும் பிரச்சனைகளை மக்கள் தட்டிக் கேட்கப் பயந்து வருகின்றனர். குறிப்பாக பயணம்செய்யும் பெண்களுக்கு ஊறு விளைவிக்க என்று ஒரு கூட்டமே அலைகின்றது. துhங்குவதைப் போல பாவனை செய்து அவர்கள் மீது சரிவது. அப் பெண்கள் சற்று கண் அயரும்போது கைகளாலும் கால்களாலும் உராய்வது என்று எல்லாமே நடக்கும். அதுமட்டுமன்றி தண்ணீர் மற்றும் சிறு உணவுவகைகளை விற்பதற்கு இடையில் ஏறும் சிறு வியாபாரிகள் தங்கள் கைகளுக்கு சிக்கும் பொருட்களை திருடிக்கொண்டு போகும் சந்தர்ப்பங்களை நான் எத்தனையோ முறை கண்டும் நமக்கேன் வீண்வம்பு என்று இருந்ததுண்டு. காரணம் நான் அடிக்கடி ரயிலில் செல்பவன். என் பாதுகாப்பும் எனக்கு முக்கியமே. 

அண்மையில் என் அலுவலக நண்பர் ஒருவர் என்னிடம் அலுத்துக்கொண்ட ஒருவிடயம் தன் தங்கைக்கு சீற் புக் பண்ணுவதற்காக அவர் கொழும்பு கோட்டை புகையிரத நிலைத்திற்குச் சென்று அங்குள்ள டிக்கட் கவுண்டரில் யாராவது பெண்கள் பக்கத்தில் சீட் தருமாறு கேட்டிருக்கின்றார். அவர்களும் சரி என்று கூறிவிட்டு கடைசியில் ஒரு கிழவரின் பக்கத்தில் புக் செய்து விட்டு இனவாதம் பேசியுள்ளனர். தன் தங்கையின் பாதுகாப்பு குறித்து அவர் வாயே திறக்காமல் வந்திருக்கின்றார். அவள் விடிய விடிய அனுபவித்த துண்பங்கள் சொல்லில் அடங்காது. அவ்வளவு தள்ளாத வயதிலும் அந்தக் கிழம் இவள் மீது சாய்வதும் கையால் இடுப்பில் இடிப்பதுமாக இருந்திருக்கின்றது. இவளுக்கோ மொழிப் பிரச்சினை. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவள் சகலத்தையும் பொறுத்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்திருக்கின்றாள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண்பிள்ளைகள் தங்கள் பாதுகாப்பு பற்றி சற்றுக் கவனம் செலுத்தவேண்டும். பஸ் வண்டிகளிலும் ரயிலிலும் நடக்கும் இவ்வாறான பிரச்சினைகள் பற்றி எவ்வளவோ எழுதியும் நடந்தது ஒன்றுமில்லை. கூடுமானவரை தங்கள் பாதுகாப்புக்காக ஒருவரை அழைத்துச் செல்லவே வேண்டும். அதுமட்டுமன்றி குட்ட குட்ட குனிபவன் போல இவ் அக்கிரமங்களை தாங்கிக்கொண்டு செல்லாமல் யாரிடமாவது கூறலாம். அல்லது பாதுகாப்பு கருதி எதிர்க்கலாம். விசயம் அம்பலத்துக்கு வரும்போது நிச்சயம் அங்கு ஏதாவது தீர்வு கிடைக்கலாம்.  


இதேபோல் என் இன்னொரு நண்பர் கூறிய விடயம். “காசு கொடுத்தால் இப்ப ஏலாதது ஒண்டுமில்ல. அவையள் புக்கிங் சீற் இல்லை என்று சொல்லிவிட்டு சில சீற்களை ஒதுக்கி வைச்சு கொள்ளுவினம். காரணம் பிறகு யாராவது அவசரமா போகணும் எண்டு கேட்டால் 500 ருபாய்க்கு மேல் வாங்கிக்கொண்டு அதை கொடுப்பாங்கள். நான் எத்தனையோ முறை கண்டிருக்கன். ஏன் நான்கூட ஒருக்கா அவசரம் எண்டு பேரம் பேசி கடைசியா 450 ருபா கொடுத்து விட்டு வந்தன்” என்றார். “இவற்றைக் கண்டுகொள்ள யாரும் இல்லை. அங்குள்ள மேலதிகாரிகளே இதற்கு துணைசெல்லும்போது என்ன செய்வது” என்று விசனப்பட்டார். ஒரு கம்பார்ட்மெண்டில் 60 சீட் இருக்கும்போது அவசரத்துக்கு ஒரு சீற் வைத்துக்கொள்ளலாம். காரணம் யாராவது கை கால் முடியாதவர் அல்லது கர்ப்பிணித் தாய்மார் வந்தால் கொடுக்கலாம். ஆனால் இவர்கள் செய்வதோ அநியாயம். 10-15 சீற்களை ஒழித்துவைத்துக்கொண்டு அதில் இலாபம் சம்பாதிக்கின்றனர். இதை உரியவர்கள் ஆதாரத்துடன் மேலிடத்துக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இது தொடரத்தான் செய்யும். இது அதிகமாக இரவு நேர இரயில்களிலே நடக்கின்றன.. இதனால் இங்கு பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான்.     


சிலவேளைகளில் சில வயது வந்த ஆண்கள் ஒன்றாக சேர்ந்து ரயிலுக்குள்ளேயே மது அருந்தி, பாட்டுப்பாடி, நடனமாடி பயணிகளை இம்சைப்படுத்துவதுண்டு. பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்களே அவ்வாறான வேலைகளில் அதிகமாக ஈடுபடுகின்றனர். சிலரோ கஞ்சா போன்ற பொதைப்பொருட்களை பாவிப்பதையும் அதன்போது விடயம் தெரிந்தவர்கள் அந்தப் புகை சுவாசத்திற்குச் செல்லாதவாறு மூக்கைப் பொத்தி அவஸ்த்தைப்படுவதையும் நான் எத்தனையோதடவை கண்டுள்ளேன்.  மதுபோதையில் சில இளைஞர்கள் இளம்பெண்களுக்கு சேட்டை விடுவதும் அவர்களை முறைத்து பார;ப்பதும் கூச்சலிடுவதும் என்று தாங்கள் தான் ரயிலுக்கு சொந்தக்காரர்கள் என்பது போல் நடந்துகொள்வார்கள். அதிகாரிகளோ இவற்றைக் கண்டும் காணாமல் போய்விடுவார்கள். எல்லோரும் துணையோடு செல்வார்கள் என்றில்லை. தனியாகவோ அல்லது இளம் பெண்கள் சேர்ந்தோ போவதுண்டு. இந்நிலையில் அவர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.


இந்த ரயில் பயணங்களில் பெரும்பாலும் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் இளம் பெண்களே பயணிக்கின்றனர். ரயில் சிநேகம் என்பதைப் போல அதிகமான ரயில் காதல்களும் இங்கேதான் அரங்கேறுகின்றன. அதாவது வரும்போது தனித்து வருபவர்கள் இடையிலேயே ஜோடி சேர்ந்து விடுவார்கள். பட்டப்பகலில் பலருக்கு மத்தியில் பயணம் செய்யும்போதே ஆண்களின் தொல்லைகளைத் தாங்க முடிவதில்லை. அதிலும் இரவு நேர பயணம் என்றால் சொல்லவே தேவையில்லை. எத்தனையோ யோசனைகள் பிரச்சினைகளுக்கு மத்தியில் பயணம் செய்யும்போது அவர்களது மனநிலை பற்றி சிறிதும் கவலைப்படாது தங்கள் வெறியாட்டத்தைத் தொடங்கி விடுகின்றனர்.

இது எனக்கு நடந்த ஒரு சம்பவம். ஒரு ரயில் பயணத்தின்போது எனக்கு நல்ல உறக்கம். திடீரென ஒரே சலசலப்பு. சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட நான் சற்று எட்டிப் பார்த்தேன். ஒரு இளைஞன் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தான். தூக்கத்தின்போது எதிரே இருந்த பெண்ணின் உடம்பின்மீது காலை போட்டுவிட்டானாம். அந்தப் பெண் அலறியதில் அவ்விடத்தில் கூட்டம் சேர்ந்துவிட்டது. அந்த இளைஞன் குடித்தும் இருந்தான். பொங்கியெழுந்த ஒருவர் அந்த இளைஞனை தரதரவென இழுத்துச் சென்றார். அப்போது அவனது ஒரு கால் கழன்று விழுந்துவிட்டது. அப்போதுதான் தெரிந்தது அவனது ஒரு கால் செயற்கையாக பொருத்தப்பட்டிருக்கின்றது என்ற உண்மை. இழுத்துச் சென்றவரோ தன் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் அவனை தொடர்ந்து இழுத்துச்சென்று கழிப்பறையின் அருகில் போட்டுவிட்டார். இவனுக்கு கால் இல்லையே என்று கவலைப்படுவதா? அல்லது போதையில் மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கின்றான் என்று கோபப்படுவதா? சற்றுத் திரும்பி பார்த்த பிறகுதான் எனக்கு உண்மை புரிந்தது. பெரிய உத்தமனைப் போல நடந்துகொண்ட அந்தப் பேர்வழி குறிப்பிட்ட அந்தப் பெண் அருகே சென்று இளைஞன் இருந்த இடத்தில் அமர்ந்துகொண்டு தன் மன்மத லீலைகளை லாவகமாக செய்யத் தொடங்கிவிட்டான். அந்தப் பெண்ணும்கூட அதற்கு உடன்பட்டாள். தனது மகள் அருகில் இருக்கிறாள் என்ற நினைப்புக்கூட அவளுக்கு வரவில்லை. பின்னர் அவர்கள் பிரிந்து செல்லும்போது தங்களது முகவரிகளையும் தொலைபேசி இலக்கங்களையும் பரிமாறிக்கொண்டனர். இந்த கருமங்களை என்னவென்று சொல்வது… 


இதில் நடுநிசி வியாபாரிகள் வேறு. ஏற்கனவே தூக்கம் கலைந்த கோபத்தில் சற்று கண் அயர்ந்தேன். என் காதருகில் வந்து கோப்பி.... சிகரட்.... கோப்பி என்றான் ஒரு வியாபாரி. எனக்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டேன். சிறிதுநேரம் கழிய நல்ல தூக்கத்தில் இருக்கும்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. ஒரு பெண் அலறிக் கத்திக்கொண்டிருந்தாள். அவ்விடத்தில் ஒரே கூட்டமாக இருக்க நானும் எழுந்துசென்று பார;த்தேன். தன் 3 பவுண் தங்கச் சங்கிலியை யாரோ ஒருத்தன் அறுத்துச் சென்றுவிட்டன் என்று அப்பெண் தலையில் அடித்துக்கொண்டு கதறினாள். வேறுயாருமில்லை அந்த வியாபாரிதான் கோப்பி விற்பதுபோல பாசாங்கு செய்து நோட்டம் பார்த்து தங்கச்சங்கிலிக்கு ஆட்டையைப் போட்டுவிட்டான் என்று கூடியிருந்தவர்கள் பேசிக்கொண்டனர். இரவில் எங்கு போய் இவர்களைப் பிடிப்பது? இப்படித்தான் மயக்கமருந்து கலக்கப்பட்ட கோப்பியை பருகக் கொடுத்து செல்போன் உட்பட பெறுமதிமிக்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக அண்மையில் பத்திரிகையொன்றிலும் செய்தியொன்று பிரசுரமாகியிருந்தது. 


இன்று நாட்டில் இவ்வாறான விடயங்கள் வெகு சாதாரணமாக நடக்கத்தொடங்கிவிட்டது. ஆகவே நாம்தான் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கூடுமானவரை இரவு நேர ரயில் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பயணம் என்றால் நகைகளை அணியாமல் பாதுகாப்புடன் செல்லவேண்டும். அப்போது இவ்வாறான விபரீதங்களிலிருந்து ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம். அல்லது இப்படியான விசமிகளிடமிருந்து தப்புவதற்காக தற்காப்புடன் செல்லவும் தயாராக இருக்கவேண்டும். தொட்டதற்கெல்லாம் சட்டம் இயற்றும் அரசாங்கம் இவ்வாறான செயல்களுக்கெதிராகவும் சட்டம் இயற்ற வேண்டும். இந்த விடயங்களில் கூடுதல் அக்கறை எடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒருசிலர; செய்யும் செயலால் ஏனையோர் குடும்பத்தோடு வெளியே போகமுடியாத நிலை காணப்படுகின்றது. நடக்கும் எல்லா அக்கிரமங்களையும் சகித்துக்கொண்டுதான் பயணிக்கவேண்டுமென்பது நமது தலைவிதியா? நிம்மதியையும் தூக்கத்தையும் தொலைத்த அந்தப் பிரயாணம் உண்மையிலேயே0 திருப்திகரமானதாக அமையவில்லை. ஆடைத் தொழிற்சாலை யுவதி காலிழந்த குடிமகன் காதாநாயகனைப் போல வந்த அந்த ஆசாமி நடுநிசி வியாபாரி... அப்பப்பா!  ஒரு பயணத்தில் எத்தனை கதாபாத்திரங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது! அன்றுடன் வெறுத்த இரவு நேர ரயில் பயணம் இன்றுவரை தொடரவில்லை.  


நன்றி: இருக்கிறம்

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites