மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில். வீதியோரமாக அமைந்திருக்கும் பெண்கள் விடுதியொன்றில் கிறிஸ் மனிதன் புகமுயற்சி செய்துள்ளான். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எனினும் விடுதியிலிருந்த பெண்கள் கூக்குரலிட்டதைத் தொடர்ந்து அவன் அருகிலுள்ள ஒழுங்கை ஒன்றுக்குள் ஓடித்தப்பியுள்ளான்.
சற்று நேரத்தில் சம்பவ இடத்துக்கு பவள் கவச வாகனமொன்றில் விரைந்து சென்ற இராணுவத்தினரும் மோட்டார் சைக்கிள் குறூப்பைச் சேர்ந்தவர்களும் குழுமிநின்ற மக்களைத் துரத்தியதுடன். மர்ம நபர் ஓடிச்சென்ற ஒழுங்கை வாசலில் காவலுக்கு நின்றதையும் காணமுடிந்தது. பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வந்ததுடன் அவ்வழியால் சென்ற சில இளைஞர்களை மறித்து விசாரணை செய்துள்ளனர். மேலதிக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு மாலை வரை தேடுதல் இடம்பெற்றுள்ளது.









0 comments:
கருத்துரையிடுக