ரமழான் மாதத்தை முன்னிட்டு கிழக்கிலும், புத்தளம், குருநாகல், கண்டி போன்ற பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். ரமழான் நோன்பை முன்னிட்டு இரவு நேரத்தொழுகையில் ஈடுபடும் முஸ்லிம்களின் நலன்கருதியே பாதுகாப்பை பலப்படுத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பு கூறியுள்ளது.
முஸ்லிம் அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளுடன் இதுகுறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியுள்ளார். கிழக்கு பகுதியில் உள்ள பள்ளிவாசல்களின் நிர்வாக்கிகளுடன் சிறப்புக் கலந்தரையாடல் ஒன்றை அவர் நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையே மகர சிறைச்சாலையில் உள்ள பள்ளிவாசல் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





0 comments:
கருத்துரையிடுக