அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

புதன், 3 ஆகஸ்ட், 2011

தாய்-சேய் நலன் பேணல்


(தாய்-சேய் நலன் வார சிறப்புக் கட்டுரை)

- முஹம்மட் பிறவ்ஸ்

உலகில் உன்னதமான கடவுளின் ஒரு படைப்னெ தாய் போற்றப்படும் அதேவேளை, அவள் தனது அரிய பொக்கிஷமாக தனது குழந்தையை நினைக்கிறாள். தாய்க்கும் சேய்க்கும் இடையிலான உறவே உலகில் மிக நெருக்கமானதென நம்பப்படுகிறது.
கருவறையில் தொடரும் இரத்த சொந்தம் அந்தக் குழந்தையை வளர்த்துவிடும்வரை படும்பாட்டை வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாது. தாய்மையின்போது ஒரு தாய் "மறுபிறவி" எடுக்கின்றாள்.


கருப்பையில் குழந்தை உருவானதும் தாயின் தியாகம் ஆரம்பிக்கின்றது. கர்ப்பம் தரித்த பெண்கள் குளிர்நீரில் குளித்தலாகாது. அத்துடன் குளிர் ஆகாரங்களை உட்கொள்வதையும் தவிர்ந்துக்கொள்வது நல்லது. அது மட்டுமல்லாது சத்தமிட்டுப் பேசுவதையும் சத்தம்கூடிய ஒலிகளைக் கேட்பதையும் தவிர்க்கவேண்டும். இல்லையேல் கருவிற்கு அந்த ஒலி அதிர்வை ஏற்படுத்தும். தனது ஆசாபாசங்களை தனது கருவின் நலன்கருதி விட்டுக்கொடுக்கிறாள். ஒரு தாயின் கர்ப்பகால செயற்பாடுகள் அந்தக் குழந்தை பிறந்து 23 வயதுவரையில் வெளிக்காட்டப்படுவதில் செல்வாக்குச் செலுத்துமென மருத்துவர் கூறுகின்றனர்.

பிரசவம் என்பது சில தாய்மாருக்கு சாதாரணமாக இருக்கும், சிலருக்கு அசாதாரணமாகவும் மேலும் சிலருக்கு ஆபாயகரமானதாகவும் இருக்கும். சிலவேளைகளில் தாய், சில மரணங்கள்கூட நிகழ்வதுண்டு.

இலங்கையில் தாய்-சேய் மரணவீதம் நடைபெறும் பிரசவங்களுடன் ஒப்பிடுகையில் இதுஒரு சாதாரண விடயமே என்று கல்முனை வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். கர்ப்பகாலத்தின்போது முறையான பராமரிப்பு இல்லாமால்போவதாலேயே அதிளவான கருச்சிதைவுகளும் தாய்-சேய் மரணங்களும் இடம்பெறுகின்றன.

எல்லா கர்ப்பங்களும் 9 மாதங்கள் (40 வாரங்கள்) முடிவுற்று அதன் பின்னர் குழந்தை பிறப்பதில் சில நேரங்களில் கர்ப்பகாலத்திற்குள்ளேயே தானாக கரு கலைந்து விடுகிறது. இது தானாக ஏற்படும் கருச்சிதைவு ஆகும். பொதுவாக இந்த கருச்சிதைவு 26 வாரங்களுக்கு முன்னதாகவே ஏற்படும்.

தாய்-சேய் நலன் தொடர்பாக சாய்ந்தமருது M.O.H. அலுவலக உத்தியோகத்தர் டொக்டர் வைத்தியர் ஷகீலா அவர்களிடம் தொடர்புகொண்டு கருத்துக்கேட்டபோது; "தற்போது கிழக்கு மாகாணத்தில் குறிப்பிடத்தக்களவு தாய்-சேய் மரணங்கள் நடைபெறுவதில்லை. நாங்கள் பாடசாலை மட்டத்திலிருந்து யுவதிகளுக்கான பராமரிப்பு வேலைகளை மேற்கொண்ட வருகின்றோம்‌. குழந்தை கருவில் உருவானது முதல் பிறந்து வளரும்வரை எமது சாய்ந்தமருது சுகாதாரப் பணிமனை அவர்களை கண்கானித்துப் பராமரித்துவருகின்றது. இலங்கையில் முதலாவது தாய்ப்பாலூட்டும் நிலையம் சாய்ந்தமருதில் அமையப்பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையங்களை எதிர்காலத்தில் நாடாளாவியரீதியில் விரிவுபடுத்தி தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்."


குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் கண்டிப்பாக தாப்பால் கொடுப்பது மிகவும் சிறந்தது. குழந்தை பிறந்தவுடனேயே சுரக்கும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் பால் "காம்புப் பால்"' குழந்தை பிறந்து சில மணி நேரங்களின் பின்னர் கட்டாயம் குழந்தைக்கு கொடுக்கவேண்டும். சில தாய்மார்கள் இதை கொடுப்பதற்கு யோசிப்பார்கள். அந்தப்பாலில்தான் குழந்தைக்குத் தேவையான முழு நோய் எதிர்ப்பு சக்திகள் அடங்கியுள்ளன. 12 மாதங்கள்வரை தாய்ப்பாலூட்டுவதால் குழந்தையின் நுண்ணறிவுத்திறன் 9 வீதத்தால் அதிகரிக்கிறது. மேலும், குழந்தைகளுக்கு வயிறு, குடல் உபாதைகள் வராமல் தடுக்கும். இது குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது மற்றும் மலச்சிக்கல் ஏற்படுத்தாது. தாப்பால் குழந்தையின் ஜீரண உறுப்புகளில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கும் ஆற்றல்கொண்டது.

தாப்பால் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட நோகள் உண்டாவதைத் தடுக்கும். ஏனெனில் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் உட்சுவரில் நடு பாதுகாப்பு படலத்தை இது ஏற்படுத்துகிறது. இலுக்கேமியா எனும் இரத்தம் சம்பந்தமான கேன்சர், சர்க்கரை நோய் (டைப் 1) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோகள் பிற்காலத்தில் ஏற்படுவதை தடுக்கிறது. தாப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்குமிடையில் நெருங்கிய பாசப்பிணைப்பு எற்படுகின்றது. மேலும், மூளை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பமிலங்களும் இதில் உள்ளன.


தாப்பால் கொடுப்பதினால் தாய்க்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாக நம்பப்படுகின்றது. தற்காலத்தில் சில தாய்மார்கள் தாய்ப்பாலூட்டுவதால் அழகு கெட்டுவிடும் என்று புட்டிப்பாலையே நாடுகின்றனர். மேலும் சில பெண்கள் வேலைக்குப்போவதாலும் இதை அலட்சியமாக விட்டுவிடுகின்றனர்.
தாப்பால் கொடுப்பதால் தாய்-சேய் உறவில் நல்லதொரு இணக்கத்தை ஏற்படுத்த உதவுகின்றது. தாய் தன் குழந்தைக்கு தாப்பால் கொடுக்கும்போது ஏற்படும் அந்த அணைப்பு பிள்ளைக்கு மிகவும் ஆறுதலையும் புத்துணர்ச்சியையும் அளிக்கின்ற ஒரு சிறந்த செயற்பாடாகும்.


இலங்கையில் சுமார் 75 சதவீதமான தாமார்கள் தமது குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதகாலத்திற்கு தாய்பால் மட்டுமே உணவாகக் கொடுப்பதாகவும் இது ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அண்மைக்கால ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.

கடந்த சில வருடங்களில் மாத்திரம் இந்த நிலைமை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாகவும் இதற்கு உலக சுகாதார ஸ்தாபனம், இலங்கை சுகாதார அமைச்சின் தாய்-சேய் நலன்பிரிவு உள்ளிட்ட பல அமைப்புக்களினதும் கடுமையான பிரசாரமே காரணம் என்றும் கருதப்படுகிறது.

தாய்-சேய் நலம் தொடர்பாக பல மட்டங்களில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. உலக உணவுத்திட்டத்தின் தாய்-சேய் ஊட்ட நலமானது கீழ்வரும் குறிக்கோள்களைக் கொண்டு செயற்படுகின்றது.


* 5 வயதிற்குட்பட்ட சிறார்களின் எடைக் குறைவுக் குறையைத் தீர்த்தல்.
* பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கருவுற்றிருக்கும் பெண்களின் ஊட்ட நலத்தை மேம்படுத்த உதவுதல்.
* பிறக்கும் குழந்தைகளின் எடை குறையாமல் பாதுகாத்து நோய் எதிர்பு சக்தியைக் கூட்டுதல்.
தாய்சேய் நலனுக்கென அரசாங்கம் தனியானதொரு "குடும்ப சுகாதார பணியகம்" ஒன்றை உருவாக்கி அதன்மூலமாக பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. சுகாதாரம் மற்றும் போசணை அமைச்சின் கீழுள்ள தாய்-சேய் சுகாதாரம், குடும்பத் திட்டமிடல் நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றுக்கான நிலையமாகும்.

தாய்-சேய் சுகாதார பிரிவின்மூலம் இலங்கை அடைந்துள்ள வளர்ச்சியானது சர்வதேசரீதியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது. இது ஆரம்பத்தில் தாய்-சேய் சுகாதார பணியகமாக பெயரிடப்பட்ட போதிலும்கூட பின்னர் "குடும்ப சுகாதார பணியகம்" என்று மீளப் பெயரிடப்பட்டது. "தாய்மார் சுகாதாரம்', "சிறுவர் சுகாதாரம்', "குடும்பத் திட்டமிடல்' என்பன இலங்கை சுகாதார அமைச்சின் ஊடாக தற்போது வழங்கப்படும் சுகாதார சேவைகளில் மிகவும் முக்கியமானவையாகும்.


நீங்களும் இப்பணியகத்தினூடாக உங்களுக்குத் தேவையான தாய்-சேய் சம்பந்தமான சகல ஆலோசனைகள், உதவிகள், குடும்பத் திட்டமிடல் போன்ற சகல விபரங்களையும் அறிந்து கொள்ளமுடியும்.
குடும்பத் திட்டமிடல் முறைகளின் பாவனை பற்றிய சகல பிரச்சினைகளுக்கும் பதிலளிப்பதற்கு துணைவழியொன்று இங்குஉள்ளது. இந்த சேவையானது குடும்பத் திட்டமிடல் சேவைகளை வழங்கும் சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகங்களுக்கும் அரசாங்க மருத்துவமனைகளின் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கும் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பின்வரும் தொலைபேசி இலக்கங்களினூடாக சுகாதார பணியகத்துடன் தொடர்புகொண்டு இந்த சேவையினைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

தொலைபேசி: 0112696677, 2699332, 2681311, 2681309,
தொலைநகல்: 0112675171,
மின்னஞ்சல்: fhbhelpline@gmail.com ,
இணையத்தளம்: www.familyhealth.gov.lk/tamil

குறிப்பு: தொலைநகல் ஊடாக தங்களது கேள்விகளை அனுப்பும்போது "குடும்பத் திட்டமிடல் உதவியளிக்கும் சேவையின் கவனத்திற்கு'' என்று குறிப்பிட மறவாதீர்கள்.

2 comments:

தாய் - செய் நலத்தினை பேணுவதற்கான
அனைத்து தகவல்களும் பயனுடையதாக
இருக்கின்றது. அவ்வாறே நண்பர்களின் நலத்தினை பேணுவதற்கான
வழிமுறைகளையும் கூறவும் நண்பரே....!

நண்பர்களின் நலத்தைப் பேண அவர்களை காதலிக்காமல் இருக்க பார்த்துக்கொள்ளுங்கள்...

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites