அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு



லிபியா தலைநகர் திரிபோலியின் மத்திய பகுதி கடாபியின் அரசுக்கு எதிரான புரட்சிபடையின் கையில் வீழ்ந்துள்ளது. லிபியாவின் புரட்சிப்போராளிகள் வாகன அணி ஒன்று லிபியாவின் தலைநகர் திரிபோலியின் மத்திய பகுதியினுள் பச்சை சதுக்கத்தினுள் பலத்த சண்டையின் பின்னர் இன்று அதிகாலை பிரவேசித்தது. மக்கள் ஆரவாரத்துடன் கொடிகளை அசைத்து அதனைவரவேற்றனர்.

கடாபியின் முடிவு நெருங்கி விட்டதாகவும் உடனடியாக பதவியிலிருந்து போகும்படியும் பிரித்தானியா கடாபியைக் கோரியுள்ளது. கடாபி ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். கடாபியின்மகன் சாய்ப் அல்-இஸ்லாமை போராளிகள் பிடித்து விட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவரின் மற்றொரு மகனும் கைது செய்யப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கடாபியின் மகன் கைது செய்யப்பட்டு விட்டார் என்ற தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடருநர் லூயி மொரெனோ ஒக்கம்போ அறிவித்துள்ளார்.


பொதுமக்களை சித்திரவதை செய்து கொலை செய்ததாக சாய்ப் அல்-இஸ்லாம் மீது நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடாபியின் இன்னொரு மகன் முஹமத் தொலைபேசி மூலம் அல்-ஜஸீரா தொலைக்காட்சிக்கு தெரிவிக்கையில் தனது வீட்டை சுற்றி புரட்சிப்போராளிகள் சூழந்து விட்டனர் என்றும் துப்பாக்கி வேட்டுக்கள் கேட்பதாகவும் சொன்னார் சில நிமிடங்களில் தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.  அதன் பின்னர் புரட்சிக்குழுவினர் அவரை கைது செய்துள்ளனர் என்ற அறிவிப்பு வெளியானது.


நகரின் சில பகுதிகளில் சண்டை நடைபெறுவதாகவும் ஆனால் வெற்றிக்கொண்டாட்டங்கள் தொடருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறீன் ஸஷகயார் தற்போது மாவீரர் சதுக்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்ட்டுள்ளது. தானும் ஏனைய பத்திரிகையாளர்களும் தங்கியிருக்கும் ஹோட்டலைச் சுற்றி சண்டை இடம்பெறுவதாக பிபிசியில் திரிப்போலி செய்தியாளர் மத்தியு பிரைஸ் தெரிவித்தார்.


கடாபியிடம் இன்னும் ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் இருப்பதாக நம்பப்பட்டாலும் அவர்களில் பெரும்பாலோர் போராளிகளிடம் சரணடைந்து விட்டார்கள் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. போராளிகளின் தேசிய ஆட்சி மாற்ற சபையின் தலைவர் முஸ்தபா முஹமத் அப்துல் ஜலில் ‘ திரிபோலி நகரினுள்ளும் வெளியிலும் சிறிய அளவில் எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன என்று குறிப்பிட்டார்.

லிபிய அரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சர் மோஸா இப்ராஹிம் தகவல் வெளியிடுகையில் நண்பகல் வரையில் 1300 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 5000 பேர் வரையில் காயமடைந்தனர் என்றும் வைத்தியசாலை தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்தார். கொடுங்கோலனின் பிடியிலிருந்து லிபியா விலகிச்செல்ல ஆரம்பித்து விட்டதாகவும் இன்று இரவு கடாபியின் ஆட்சியின் இறுதிக்கட்டம் வந்து விடும் என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா வாஷிங்டனில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


நேட்டோ படைகளின் ஆதரவுடன் தாக்குதலை நடத்தி வந்த கிளர்ச்சி படைகள் திரிபோலியின் மத்திய பகுதியை கைப்பற்றிய செய்தி அறிந்ததும் பிரித்தானிய தலைமை அமைச்சர் டேவிட் கமரன் தனது விடுமுறையை முடித்துக்கொண்டு உடனடியாக லண்டன் திருப்பி பாதுகாப்பு சபை கூட்டத்தை நடத்தினார். கடாபியின் முடிவு நெருங்கி விட்டது என கமரோன் தெரிவித்தார்.


0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites