அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இன்று கிண்ணஸ் உலக சாதனையொன்று நிலைநாட்டப்பட்டது

உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கண்டனப் பேரணி

கிழக்கு மாகாணத்தில்‌ கிறீஸ் மனிதனைக் கண்டித்து வீதியில் இறங்கிப் போராட்டம் நடாத்தும் பெண்கள்

கிழக்கு மாகாணசபையால் நடாத்தப்படும் நடுக்கடலுக்குள் சொகுசுப் பயணம் East Expo-2011

கவனிப்பாரற்ற நிலையில் வாழும் யாழ்ப்பாணம் மத்ரஷா வாழ் அகதிமுகாம் மக்கள்

வெள்ளி, 21 அக்டோபர், 2011

கடாபியை உயிருடன் பிடித்த வீடியோக் காட்சி

கடாபியை கொல்வதற்கு முன்னர் வாகனம் ஒன்றிலிருந்து உயிருடன் இறக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.இந்த வீடியோக் காட்சியின் கடாபியை துடிக்க துடிக்க இழுத்து வரப்படுகின்றது. இதனை மூங்கில் பூக்கள் வாசகர்களுக்காகத் தருகின்றோம்.

கொல்லப்படுவதற்கு முன் வாகனத்திலிருந்து இறக்கப்டுகிறார். (வீடியோ)

வியாழன், 20 அக்டோபர், 2011

லிபிய ஜனாதிபதி கடாபி கொல்லப்பட்டார்? (படம் இணைப்பு)

லிபியா நாட்டின் ஜனாதிபதி கேர்ணல் கடாபி காயமடைந்த நிலையில் தற்போது உயிரிழந்தள்ளதாக அந்நாட்டின் இடைக்கால கவுன்சிலர் தெரிவி்த்‌துள்ளார். இன்னுமொரு தகவலின்படி காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்தத் தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையிலேயே கடாபி இரத்தக் கறையுடன் கூடிய இப்படம் வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


100 பவுண்ட் எடையுடைய விதைப்பை கொண்ட மனிதன்


லாஸ் வேகாஸ் நாட்டைச் சேர்ந்த 47 வயதுடைய வெஸ்லி வாரன் என்பவரின் விதைப்பையில் ஏற்பட்ட நோய் காரணமாக அவரது விதைப்பை 100 பவுண்ட் எடையுடையதாக பிரமாண்டமான முறையில் வீங்கிக் காணப்படுகின்றது. இடுப்புதொடை நரம்பு பாதிக்கப்பட்டமையால் நிணநீர்த்தேக்கமடைந்து இந்த வீக்கம் வந்துள்ளது.
அவரது விதைப்பையில் மேற்பட்ட 100 பவுண்டுகள் எடை திரவம் கொண்டு பருத்துள்ளது. இதனால் அசாதரணத் தன்மையினால் அவருக்கு சாதாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவது கஷ்டமாகவுள்ளது. இதனால் அதைச்சுற்றி ஒரு தலையணையை வைத்துக்கொண்டு திரிகின்றார். அதிகளவான எடையினால் சுவாசிப்பதில் சிரமப்படுகிறார். அவரால் வேலை செய்ய முடியாது. சிறுநீரைக் கட்டுப்படுத்தமுடியாமல் உள்ளது.


வீதியில் செல்லும்போது மக்கள் இவரை விசித்திரமாகப் பார்க்கின்றனர். இதனால் இவர் மனம் சோர்வடைந்து காணப்படுகின்றார். இதனால் அதிகளவான நேரத்தை வீட்டிலேயே செலவிடுகிறார். இவருக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்கு 1 மில்லியன் பணம் தேவைப்படுகின்றது. 

இப்பணம் என்னிடம் இருந்தால் எல்லோரும்போல் சாதாரணமாக என்னாலும் இருக்கமுடியும். நான் ஒரு ஏழை. தனவந்தர்கள் எனக்கு உதவி செய்தால் இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என வெஸ்லி வாரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

நீங்களும் வெஸ்லி வாரனுக்கு உதவ விரும்பினால் benefitballsack@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளவும்.

இதோ பாதிக்கப்பட்ட வெஸ்லி வாரனின் வீடியோ துருவம் வாசகர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 18 அக்டோபர், 2011

மரதன் ஓட்டம் ஓடும் 100 வயது தாத்தா


பிரித்தானியாவைச் சேர்ந்த 100 வயதான தாத்தா ஒருவர் கனடாவின் தலைநகரான டொரண்டோவில் மரதன் ஒட்டத்தை முடித்துள்ளார். இவர்தான் உலகின் அதி வயதுகூடிய மரதன் வீரர் என்ற பெருமையையும் தட்டிக் கொண்டுள்ளார். இவரின் பெயர் பெளஜா சிங்.

ஞாயிற்றுக்கிழமை அன்று ஓடிய சிங் 8 மணி நேரம், 25 நிமிடங்கள், 16 நொடிகளில் 26 மைல் தூரம் மரதன் ஓட்டத்தை ஓடி முடித்துள்ளார்.

தனது மனைவி, மகனின் இறப்பின் பின்னர் 11 ஆண்டுகளுக்கு முன்னர் ஓடத்தொடங்கிய சிங் ஒவ்வொரு நாளும் 10 மைல் தூரம் ஓடியுள்ளார். இவர் தினமும் இஞ்சியால் செய்த குழம்பையும், தேநீரையுமே பிரதானமாகக் கொண்டுள்ளார். தான் எப்போதும் சந்தோசமாக இருப்பதே வெற்றியின் ரகசியம் என்றும் குறிப்பிட்டள்ளார்.






360 பாகையில் படமெடுக்கும் கமெரா கண்டுபிடிப்பு


புகைப்படத்துறையில் தற்போது புதிய பரிணாமம் ஏற்பட்டுள்ளது. முதன்முறையாக 360 பாகையில் சுழற்சி முறையில் அழகிய புகைப்படங்களை எடுக்கக்கூடியவாறு ஒரு மாறுபட்ட கமெரா தயாரிக்கப்பட்டுள்ளது. இது உண்மையான கமெரா வடிவத்திலிருந்து மாறுபட்டு ஒரு பந்துபோல இருக்கின்றது.


பேர்லின் தொழில்நுட்பவியலாளர்களால் வடிவமைக்கப்பட்ட இப்பந்துக் கமெராவில் 36 நிலையான கமெராக்காள் உள்ளன. இவை 2 மெகாபிக்சல் மொபைல் போனின் கமெராவை ஒத்தது.

இந்தப் பந்துக் கமெராவை மேலே எறிந்துவிட்டால் அது உச்சத்தை அடைந்தபின்னர் அனைத்து திசைகளிலும் புகைப்படங்களை எடுத்துக்கொள்கிறது. பின்னர் 36 படங்களையும் ஒன்றுசேர்த்து ஒரு 360 பாகையில் ஒரு புகைப்படமாகக் காட்டுகின்றது.


பாடசாலை மாணவி மர்மான முறையில் மரணம்


குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல, தக்மல்கொட மகா வித்தியாலய சாரணர் பிரிவிலிருந்து பயிற்சிக்காக ரன்டம்பே சென்ற 15 வயது மாணவி சந்தமாலி அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

ரன்டம்பே பயிற்‌சின்போது இரவு ஓய்வறைகளில் தூங்கிக் கொண்டிருக்கும்போது மாணவிகள் அறையில் ஒரு சத்தம் கேட்டு அனைத்து மாணவிகளும் விழத்துக்கொண்டனர் சந்தமாலியைத் தவிர. களைப்பின் காரணமாக சந்தமாலி நன்றாகத் தூங்கியுள்ளார் என்று நினைத்த சக மாணவிகள் அவளைத் தொந்தரவு செய்யவில்லை.

எனினும், காலை விடிந்த பின்னரும் விளத்துக்கொள்ளாததைக் கண்டு சக தோழிகள் உடனேயே மேலதிகாரிக்கு அறிவி்த்துள்ளனர். எனினும் அவர்கள் எழுப்பும்போது சந்தமாலியின் உயிர் பிரிந்திருந்தது. 


பயிற்சிக்குச் செல்ல முன்னர் வைத்திய அதிகாரிகள் மூலம் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு தேகாரோக்கியம் உள்ளவர் சந்தமாலி என்று நற்சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறான மாணவி தனது உயிரைவிடக் காரணம் என்ன...? இந்தக் கேள்விக்குறிக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.


குருநாகல் துருவம் செய்தியாளர் பஹமுனை அஸாம்

விரைவில் பெற்றோலின் விலை அதிரிக்கக்கூடும்


உலக சந்தையில் பெற்றோலி்ன் விலை அதிகரித்திருப்பதனால் இலங்கையிலும் விரைவில் பெற்றோலின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அரசு தரப்பிலிருந்து செய்திகள் தற்போது கசிந்துள்ளன.

இவ்வருடம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 50 பில்லியன் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலைமைகளைச் சமாளிக்கவுமே இலங்கையில் பெற்றோலின் விலை அதிகரிக்கப்படவுள்ளன. தற்போது ஒரு லீற்றர் பெற்றோல் 125 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.


குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்

செவ்வாய், 11 அக்டோபர், 2011

கல்முனையின் மேயர் பதவிக்கு அடிதடி

நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகரில் அமோக வெற்றியீட்டியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
அடுத்து கல்முனை மாநகர சபை மேயர் யார் என்பது பற்றி இன்று தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதற்கினங்க நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் 2ஆவதாக விருப்பு வாக்குகளைப் பெற்ற நிஸாம் காரியப்பரை தெரிவுசெய்ய கட்சி எத்தனித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சர்ச்சையி்ல் முடிந்த கட்சிக் கூட்டத்தில் யார் கல்முனை மேயர் என்று அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து நாளை (12.10.2011) மீண்டும் கட்சியின் உயர்பீடம் கூடி யார் மேயர் என்று அறிவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களில் இன்றிரவு வீதிகளில் மக்கள் போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் வீதியில் டயர்களைப் போட்டும் எரித்துள்ளனர். அத்துடன் பஸ்களின் கண்ணாடிகளுக்கும் கல்லெறிந்துள்ளனர். இதனால் கல்முனை மாநகரம் அமளிதுமளிக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

கடந்த கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 11 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியையைக் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற முஹம்மட் ஸிராஸ் என்பவரை மேயராக பரிந்துரை செய்யவேண்டும். ஸிராஸுக்கே அதிகளவான ஆதரவு கல்முனையில் இருக்கின்றது. சிராஸ் 16,457 வாக்குகளையும், நிஸாம் காரியப்பர் 13,948 வாக்குளையும் பெற்றிருந்தனர். ஆனால், சில உட்பூசல்கள் காரணமாக அதற்கு அடுத்த நிலையிலுள்ள நிஸாம் காரியப்பரை மேயராக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் பெரிய குழப்ப நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

கல்முனையில் ஸிராஸுக்கு மேயர் பதவி வழங்கப்படாவிட்டால், நாளை கல்முனையில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பள்ளிவாசல்களில் இன்று மக்களை அமைதியாக இருக்குமாறு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை யார் கல்முனையின் மேயர் என்று தெரியவரும்‌.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites