"இதுவரை பிடிபட்ட கிறீஸ் மனிதர்களும் மக்களின் வேண்டுகோளும்"
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கடந்த சில தினங்களாக உடல் முழுவதும் கிரீஸ் பூசிய மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. என்ற செய்தியினால் மக்கள் மிகுந்த பீதியுடன் காணப்படுவதுடன் இரவு வேளைகளில் நித்திரையில்லாமல் கண்விழித்திருக்க வேண்டிய பரிதாப நிலையொன்று தோன்றியுள்ளது.
வாழைச்சேனையில் பிடிக்கப்பட சந்தேக நபர்
அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் இரவில் மக்கள் நடமாடுவதற்கு தயங்குவதுடன் தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடாததனால் முழுமையாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மர்ம மனிதர்களின் நடமாட்டத்தை கண்டறிவதில் கிராமங்கள் தோறும் இளைஞர்கள் கூரிய ஆயுதங்களுடன் காவல் காத்து வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் மக்கள் புனித நோன்பினை நோற்று வருவம் இக்காலத்தில், இரவு வேளைகளில் பெண்கள் வீட்டுக்கு வெளியே பள்ளிவாசல்களுக்கு சென்று மார்க்க கடமைகளில் ஈடுபடுவதற்கு தயக்கம் காட்டுவதனால் வீடுகளுக்குள்ளேயே தமது மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.கல்முனையில் பிடிக்கப்பட்ட சந்தேக நபர்
வீடுகளில் ஆண்கள் இல்லாத வேளைகளிலேயே இம்மர்ம மனிதர்கள் தமது கைவரிசையினை காட்டுவதாக உலவும் செய்தியினால் ஆண்களும் தமது வேலைகளின் நிமித்தம் வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனர். கிரீஸ் தடவிய மனிதர்கள் பற்றி பிரதேசங்களில் உலவும் செய்தியினால் இரவில் செல்லும் சாதாரண கிராம வாசிகளைக்கூட சந்தேகிக்கும் அளவிற்கு மக்களிடையே பீதி அதிகரித்துக் காணப்படுகின்றது. க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்காக கூட்டாக இணைந்து கல்வி கற்கும் மாணவர்கள் தமக்குத் தேவையான பாடக்குறிப்புகளை தமது நண்பர்களின் வீடுகளுக்குக் கூட சென்று வாங்கிக் கொள்ள முடியாத நிலையில் சந்தேகமும், பயமும் மக்களை ஆட்கொள்ளத் தொடங்கியுள்ளது என்று இலங்கை இணையதளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.குருணாகலில் பிடிக்கப்பட்ட சந்தேகநபர்கள்
பதுளை மற்றும் ராகலை பகுதிகளில் கிறீஸ் பூதம் (கிறீஸ் யக்கா) என சந்தேகிக்கப்படும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் பிரதேசத்தில் கிறீஸ் பூதம் (கிறீஸ் யக்கா) என சந்தேகிக்கப்படும் ஒரு குழு தலைமறைவாக இருப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகலை பிரதேசத்தில் பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தனர் என்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பதுளை பகுதியில் தலைமறைவாகியிருந்த ஆறு பேரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதேபோன்று இவ்வாறான மர்மமனிதர்களின் நடமாட்டம் நாடு முழுவதிலும் காணப்படுவதாகவும், மக்கள் பீதியில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாவலடியில் கைது செய்யப்பட்டுள்ள ஏறாவூர் மிச் நகரைச்சேர்ந்த அசனார் இதாஸ் என்ற ரியாஸ்
நாட்டின் பல பாகங்களில் பேசப்படும் மர்மமனிதர்கள் இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர்கள் அல்லது இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது வெறும் கட்டுக்கதைகளே தவிர அதில் எவ்வித உண்மையுமில்லை என்று பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார். மேற்படி மர்மமனிதர் தொடர்பாக விசாரணைகளை நடத்த பொலிஸ்மா அதிபர் தயார் நிலையில் இருப்பதாகவும் இது விடயமாகப் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை இது ஒரு திட்டமிட்ட பிரசாரமே தவிர உண்மையில்லை என அவர் குறிப்பிட்டார்.
பிடிக்கப்பட்ட இன்னொரு சந்தேக நபர்
இதுவரை கிறீஸ் மனிதர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் அங்காங்கே சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உண்மையிலேயே கிறீஸ் மனிதர்கள்தானா என்று இன்னமும் உறுதி செய்யப்பட்டவில்லை. இருப்பினும் மலையகம் மற்றும் கிழக்கு மாகாணத்தி்ல் ஆண்கள் இரவு, பகலாக மர்ம மனிதர்களைத் தேடிவருகின்றனர். மலையகத்தில் பொலிஸாரால் கண்டு பிடிக்காமல் போய்விட்டதால் விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சம்மாந்துறையில் பிடிக்கப்பட்ட வெள்ளத்தம்பி ஆதம்பாவா (மஜீத்)
மர்ம மனிதர்கள் தொடர்பான சம்பவங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பதுளை தல்தென பிரதேசத்தில் பிடிக்கப்பட்டவர்கள்
மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் மர்ம மனிதர்கள் குறித்து அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலர் வேண்டுமென்றே மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான வதந்திகளை பரப்புபவர்களாக இருப்பின் அவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசரகால சட்டம் மேலதிக வாக்குகளினால் மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்களின் சூத்திரதாரிகளைக் கூட அதன் ஊடாக கைது செய்ய முடியாமை அவசரகால சட்ட அமுலாக்கம் அர்த்தமற்றது என்பதை வெளிப்படுத்துகின்றது. பொலநறுவையில் பிடிபட்ட மனிதன்
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடினமான விடயமல்ல. எதிர்க்கட்சியில் இருக்கும் பிரஜைகள் முன்னணி மக்களின் ஆதங்கங்களை பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் ஒலிக்கச் செய்கின்ற போதிலும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கே உரித்தானது எனக் குறிப்பிட்டுள்ளது. 











1 comments:
இதுவரை பிடிபட்டவர்கள் உண்மையிலேயே கிறீஸ் மனிதர்கள் அல்லர், மனநலம் குன்றியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூரணத்துவமான உண்மை இன்னும் வெளிவரவில்லை.
கருத்துரையிடுக