மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடக்கம் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய தேடுதல் பிற்பகல்வரை தொடர்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
களுதாவளையின் சில பகுதிகள், வன்னியர் வீதி, தேவாலய வீதி ஆகிய பகுதிகளே படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு வீடுவீடாகத் தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெருந்தொகையான படையினர் குவிக்கப்பட்டு நடத்தப்பட்டுவரும் இந்தத் தேடுதலுக்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
வன்முறைகள் தொடர்ந்தால், கிழக்கில் மீண்டும் வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்துவோம் என்றும், சோதனைச்சாவடிகளை அமைத்து வீதிகளில் நிறுத்துவோம் என்றும் கிழக்குப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மட்டக்களப்பு மாவட்ட இராணுவ பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு பேசியதன் நிமிர்த்தம் இந் நடவடிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக