பஸ்லில் பயணித்துக் கொண்டிருந்த யுவதியொருவரிடம் தனது கையடக்க தொலைபேசியிலிருந்த ஆபாச வீடியோ காட்சிகளை காண்பித்த இளைஞர் ஒருவரை பஸ்ஸிலிருந்த பயணிகள் நையப்புடைத்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். கொழும்பிலிருந்து கொஹுவல நோக்கி பயணித்த பஸ்ஸொன்றிலேயே குறித்த இளைஞர் இந்த சேட்டையை செய்துள்ளார் எனவும் அவருடைய கைத்தொலைபேசியை சோதனையிட்டபோது அதில் பல ஆபாச வீடியோ காட்சிகள் இருந்ததாகவும் பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த இளைஞர் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த போது அவருடன் இருந்த யுவதியொருவரிடம் கைத்தொலை பேசியிலிருந்த வீடியோ காட்சிகளை காண்பித்துள்ளார். அதன் போது அந்த யுவதி மிகவும் தர்மசங்கடத்துக்கு உள்ளாகியுள்ளார். இதனை பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் அந்த யுவதியிடம் சம்பவம் தொடர்பாக விசாரித்ததுடன் அவ்விளைஞனை அடித்து பிலியந்தலை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.








0 comments:
கருத்துரையிடுக