புத்தளத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகவும், அதன் காரணமாக அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்ற போது மர்ம மனிதர் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதேச மக்கள் நடத்திய தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் நடத்திய தாக்குதல்களில் கிராம மக்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் பிரதேச மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
புத்தளத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து பிரதேசத்தில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிறு இரவு இடம்பெற்ற சம்பவங்களில் பொலிஸ்ஸார் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் காயப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் செய்தியாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
சம்பவங்களில் காயமடைந்த பெண்ணொருவரும் 13 வயது பிள்ளையொன்றும் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் கிறீஸ் பூதம் என்ற மர்ம மனிதர்களின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டதாக பரவிய பீதியே இந்த மோதலுக்கும் பதற்றத்துக்கும் காரணமாகியுள்ளது.
பின்னிணைப்பு: நிலைமை மேலும் மோசமடைவதை கட்டுப்படுத்துவதற்காக, புத்தளம் பெரிய பள்ளிவாசலினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் அமைதி காக்குமாறும் அனைவரும் இப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு பள்ளிவாசலுக்கு வருகை தருமாறும் அழைப்புவிடுக்கப்பட்டது.
பள்ளிவாசலில் புத்தளம் பள்ளிவாசல் சபை உறுப்பினர்கள் மற்றும் புத்தளம் நகர பிதா உட்பட அரசியல் மற்றும் சமூகப் பெரியார்கள் கலந்து கொண்டதுடன், ஆத்திரமுற்றிருந்த பொதுமக்களை கட்டுப்படுத்தி ஆறுதல்கள் கூறியதுடன் மேலும் எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடினர்.
இவ்வேளை பெரிய பள்ளிவாசலின் அழைப்பிற்கு இணங்க உடனடியாக விஜயம் செய்த வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரிகேட் கொமாண்டர் திரு கமகேயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பெறப்பட்ட முடிவுகள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டன.
இதன்படி, உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் முகாம்களுக்குள் உள்வாங்கப்படுவதுடன், நகரத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதுடன் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை எவ்வித தடங்கலுமின்றி மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டது.

0 comments:
கருத்துரையிடுக