அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

உலகில் மிகச்சிறிய டிஜிட்டல் கமெரா


உலகில் மிகச் சிறிய கமெரா விரல் நுனியளவு மிகவும் சிறியதாக உருவாக்கப்பட்டள்ளது. இதனால் 2 மெகா பிக்ஸல் அளவுடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்கமுடியும். இது 1 அங்குலம் அளவுடையது. இதன் எடை அரை அவுன்ஸ் மட்டுமே. விலை £ 65. இதனைப் பயன்படுத்த சில்லறை விற்பனையாளர்கள் அதீத ஆர்வம் காட்டுகின்றனர்.

பேச்சாளர் ஒருவர் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது; மனித விரலினால் கமெராவின் ஷட்டர் பொத்தானை ஒரு தடவை தொடுவதன் மூலம் ஒரு புகைப்படத்தை எடுக்கமுடியும். உலகின் மிகச்சிறிய கமெரா ஒரு பளிங்கைவிட சற்று பெரியது என்றாலும், அதன் படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் மிகப்பெரிய கமெராக்களில் எடுப்பது போலத் தோன்றுகிறது.


இதன் பிளஸ் தன்னியக்கமுடையது.  இதன் புகைப்படங்கள் 640 x 480 பிக்ஸல் (Resolution) உடையது. இதன் வீடியோ ஒரு செக்கனுக்கு 30 பிரேம்கள் கொண்டது. 1600 x 1200 அளவுடைய AVI வீடியோக்களையும் இதனால் பதிவுசெய்ய முடியும். இதனால் பிடிக்கப்படும் JPEG புகைப்படங்கள் 2 MP அளவுடையது. இதில் 2 GB அளவுடைய மெமரி கார்டைப் பொருத்தி அதில் புகைப்படங்களையும, வீடியோக்களையும் சேமிக்க முடியும். இதன் ரீசார்ஜ் பெற்றி 30 நிமிடங்கள் வரை செயற்படக்கூடியது.

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites