அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

புதன், 28 செப்டம்பர், 2011

உயிருடன் இருந்த தாயை சவக்கிடங்குக்கு அனுப்பினர்


பிரேசில் நாட்டில் ஒரு மருத்துவ தாதியும் வைத்தியர் ஒருவரும் இறந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் Rosa Celestrino de Assis எனப்படும் பெண்ணை சவச்சாலையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள். இப்பெண் நியுமோனியாவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அப்பெண் சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்டாள்.
ஆனால், அவர்ருடைய AFP அறிக்கையில் இறந்ததாக குறிப்பிடப்படவில்லை.  அசோசியேட்டட் பிரஸ் செய்தியின்படி, அவரது மகள்மாரான Rosangela Celestrino, Celestrino de Assis இருவரும் கடைசி நேரத்தில் தனது தாயைப் பார்த்துவிட்டுச் சென்றதாக பிரேசில் பத்திரிகை ஒன்றுக்கு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


இதேவேளை, Rosa Celestrino ஏற்கனவே சவக்கிடங்கிலுள்ள குளிர்சாதனப் பெட்டியில் இருந்தபோதுதான் மகள்மார் பார்த்தாக சி.பி.எஸ். நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சி.பி.எஸ். நியூஸ் அறிக்கையின்படி ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்திருந்து 2 மணி நேரத்தின் பின்னரே சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
 Rosa Celestrino de Assis இன் மகள்
ஏ.பி.சி. நியூஸ் இன்படி, Celestrino de Assis இறந்துவிட்டதாக அறிவித்த வைத்தியர் தனது வேலையை இராஜினாமா செய்துவிட்டார். ஆரம்பத்தில் முக்கிய அறிகுறிகள் ஏதும் தென்படுகிறதா என சோதிக்காமையால் அந்த மருத்துவ தாதியும் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உயிருடன் இருப்பவரை சவக்கிடங்குக்கு அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல. இந்த வருடம் ஜூலையில், தென்னாபிரிக்காவில் இதேபோன்று சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தார். அம்மனிதன் 21 மணிநேரத்தின் பின்னர் தன்னைப் பூட்டிவைத்திருந்த குளிர்சாதன பெட்டியிலிருந்து எழுந்துள்ளார். சவக்கிடங்கில் பணிபுரியும் தொழிலாளர்கள் பேய் என்று கூச்சலிட்டுக் கத்தியுள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites