அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இன்று கிண்ணஸ் உலக சாதனையொன்று நிலைநாட்டப்பட்டது

உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கண்டனப் பேரணி

கிழக்கு மாகாணத்தில்‌ கிறீஸ் மனிதனைக் கண்டித்து வீதியில் இறங்கிப் போராட்டம் நடாத்தும் பெண்கள்

கிழக்கு மாகாணசபையால் நடாத்தப்படும் நடுக்கடலுக்குள் சொகுசுப் பயணம் East Expo-2011

கவனிப்பாரற்ற நிலையில் வாழும் யாழ்ப்பாணம் மத்ரஷா வாழ் அகதிமுகாம் மக்கள்

புதன், 21 செப்டம்பர், 2011

இனி சாரதி இல்லாமல் வாகனம் ஓட்டலாம்


வாகன சாரதி இல்லாமல் வாகனம் ஓட்டமுடியுமென்று பிறீ பல்கலைக்கழகம் நிரூபித்துள்ளது. இதனை பேச்சு, பார்வை, இயக்கம் மூலம் கட்டுப்படுத்தி வாகனம் ஒட்ட முடியும். எதிர்காலத்தில் வீதிகள் முழுவதும் கணினி மயப்படுத்தப்பட்டுவிடும். அப்போது இதன் உதவி சேவை நமக்குத் தேவைப்படும் என்கின்றனர்.

பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஜேர்மன் தலைநகர் சுற்றி இந்த வாகனத்தைப் பரிசோதனை செய்தனர்.  இதன் சுயமான போக்குவரத்தினை ஒரு கணினி, மின்னணு மற்றும் பெட்டி, முன்னால் ஒரு கமெரா, கூரை முன் மற்றும் பின்பக்க பம்ப்பர்களைச் சுற்றி லேசர் ஸ்கேனர்கள், ஒரு துல்லியமான செயற்கைக்கோள் ஊடுருவல் முறையானது உள்ளிட்ட சாதனங்கள் ஒரு சிக்கலான கோர்வைகள் ஆள்கின்றன.

வாகனத்தைச் சுற்றி 70 மீற்றருக்கு வீதியில் பாதசாரிகள், கட்டிடங்கள், மரங்கள், கார்கள் கவனித்து இவ்வாகனம் செல்லும். அத்துடன் போக்குவரத்து விளக்குகள் மேலே சிவப்பு அல்லது பச்சை மற்றும் அதற்கேற்ப போக்குவரத்து விதிகளைப் பேணியும் செல்லும்.


விஞ்ஞானிகள் அயராத 4 ஆண்டுகளின் பயனாக இச்சிறப்பு தொழில்நுட்பத்தினை கண்டுபிடிக்க $ 551,800 டொலர்கள் செலவாகியது. இவ்வகையான கார்கள் எதிர்காலத்தில் எமது சந்தைக்கு வந்தால் வீதி விபத்துக்களைக் குறைக்க ஏதுவாக அமையும்.


இன்னொரு காலம். மனிதன் வாழத்தேவையில். ஒரு காட்சிப் பொருளாக மட்டும் இருந்தால் போதும். மற்ற எல்லா விடயங்களையும் மெசின்களை பார்த்துக் கொள்ளும். அக்காலமும் வெகு தொலைவில் இல்லை.

உலகில் மிகவும் குள்ளமான பெண்


ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த Bridgette என்ற பெண்ணே உலகில் மிக குள்ளமான பெண்ணாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கின்னஸ் சாதனையிலும் இடம்பிடித்துள்ளது. ஆனால், இவளது இதயம் சாதரண மனிதர்களின் அளவை ஒத்தது.


இவர் ஜோர்தானின் Centraliaஇல் Kaskasia கல்லூரியில் கல்வி கற்றுவருகிறார். இவருக்கு வயது 22. இவரது உயரம் 2 அடியும் 3 அங்குலமும் ஆகும். 2 கால்கள், 4.5 அங்குலம். இதற்கு முதல் குள்ளமான மனிதர்களாக துருக்கியைச்சேர்ந்த Kadirli என்ற Elif Kocaman என்பவேர நிலைத்திருந்தார். தற்போது இவர் இச்சாதனையை முறியடித்து உலகில் மிகவும் குள்ளமான மனிதர் என்ற பெருமையை தக்கவைத்துள்ளார்.


18 வயதில் 2 அடி மட்டுமே இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. ஜோர்டான் உலகின் குறுகிய பெண் ஒரே பெயரை வைத்திருப்பவர் என்றாலும், அவர் சாதனை புத்தகத்தில் இவர் தனியாக இல்லை. மற்றும் அவரது சகோதரர் 20 வயதுடைய பிராட் என்பவர் 3 அடி 2 அங்குலம் உயரமுடையவர். இவர்களது உடன்பிறப்புகள் குள்ளமானதுனர்களே என்றுமு் தெரிவிக்கப்படுகின்றது. 

பேசு Majewski osteodysplastic ஆதியிலிருந்து தன்மை வகை II என அறியப்படுகிறது ஒரு சிறிய-புரிந்து மரபியல் நிலை கொண்டிருக்கின்றன, ஆனால் அவற்றின் மருத்துவ சவால்களை செயலில் முன்னணி மற்றும் வாழ்க்கை நிறைவேற்ற தடைகள் விட கிடையாது. 



உதாரணமாக, Bridgette பிராட் தான் ஆர்வம் கராத்தே, ஜிம்னாஸ்டிக்ஸ், கூடைப்பந்து மற்றும் மந்திர தந்திரங்களை செய்ய அடங்கும் போது, நடனம் மற்றும் சியர்லீடரிங் பெறுகிறது. 


Bridgette பிறக்கும்போது 1 பவுண்ஸ்களும் 12 அவுன்ஸ் எடையும், மற்றும் அவரது சகோதரர் பிராட் 2 பவுண்ஸ்களும் 4 அவுன்ஸ் எடை கொண்டிருந்தார்கள். இதன்போது முறையே 13.5 அங்குலம், 12.5 அங்குலம் உயரங்களைக் கொண்விருந்தனர்.


செவ்வாய், 20 செப்டம்பர், 2011

வடமாகாண முஸ்லிம்கள்-கவிதைப் போட்டி

வடமாகாண முஸ்லிம் இடம்பெயர்ந்து 21 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடத்தப்படும் மாபெரும் கவிதைப் போட்டி

முதல் பரிசு : 10 ஆயிரம் ரூபா
இரண்டாம் பரிசு : 5 ஆயிரம் ரூபா
மூன்றாம் பரிசு : 2500 ரூபா
அத்துடன் 4 ஆறுதல் பரிசுகள்




திங்கள், 19 செப்டம்பர், 2011

அழிந்துவரும் மருதமுனை நெசவுத் தொழில்


புதியதொரு தலைமுறை இல்லாமல் அழிந்திடுமா மருதமுனையின் நெசவுத் தொழில் (ஒரு நேரடி ரிப்போர்ட்)

- முஹம்மட் பிறவ்ஸ்


அம்பாறை மாவட்டத்தின் முகவெற்றிலை என அழைக்கப்படும் கல்முனை மாநகரிலிருந்து வடக்கே 2.3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பிரதேசமே மருதமுனை. ஒவ்வொரு இடத்துக்கும் தனியானதொரு அடையாளம் இருக்கும். அதுபோல கிழக்கு மாகாணத்தில் நெசவுத் தொழிலுக்குப் பெயர்போன இடம்தான் மருதமுனை.

கடந்த சுனாமி அனர்த்தத்தில் இலங்கையில் பாரியளவிலான அழிவுகளைச் சந்தித்ததும் இக்கிராமம்தான். இங்கு நெசவுத் தொழிலானது ஆங்கிலேயர் காலத்திலிருந்து இன்றுவரை இருந்துவருகின்ற ஒரு புராதனமிக்க கைத்தொழிலாகும். மருதமுனையில் நெய்யப்பட்ட சாரம் அல்லது உடுதுணிகள் என்றால் இலங்கை மட்டுமல்ல சர்வதேசத்தில்கூட இதற்கென தனியானதொரு கிராக்கி இருக்கின்றது. மக்கள் இங்குள்ள பொருட்களை அதிக விலைகொடுத்து வாங்க முன்வருகிறார்கள். 


நெசவுத்தொழிலின் இன்றையநிலை பற்றி அறி வதற்கு அண்மையில் மருதமுனைக்குச் சென்றேன். அங்கு நெசவுத்துறையில் பாண்டித்தியம் பெற்ற 59 வயதான ஒஸனாரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரது பரம்பரை 1932 இலிருந்து இத்தொழிலைச் செய்துவருகின்றது. ஒஸனாரிடம் அவரது தொழிலைப் பற்றிக்கேட்டபோது;

"நான் சாரம், சேர்ட் துணி, சாரி, மேசைச்சீலை, தலையாணி உறை, பெட்சீட், கால் தட்டி எண்டு பல உற்பத்திகளச் செய்றன். நாங்க இங்க நூல் வாங்குறது எண்டா, வாங்கி விக்கிறவங்க கிட்டத்தான் வாங்குறம். 2:80 என்கிற நூல் 1650 ரூபாக்கு தாறாங்க. அதுக்கு டை பண்ணி (சாயம் போட்டு) எடுக்க எல்லாமாச்சேர்ந்து 2200 ரூபா ஒரு கிலோவுக்கு செலவாகும். இங்க பொதுவா யூஸ் பண்ணுறது Homt என்கிற நூல்தான். பொறகு அந்த நூலைச் சுத்தியெடுத்து கைத்தறியில் போட்டு காலாலும் கையாலும்தான் தறியடிக்கவேணும். அதுல நமக்கு வேண்டிய மாதிரி டிசைனைப் போட்டுக்கலாம்.


என்கிட்ட 23 கைத்தறி (hand loom) இருக்கி. ஆனா, வேலக்கி ஆக்கள் இல்ல. சுனாமிக்குப் பொறகு, வேல செஞ்ச ஆக்களெல்லாம் மத்த மத்த வேலக்கி சம்பளம் காணாதெண்டு போயிட்டாங்க. அதுக்குப்பொறகு இந்த வேலக்கி இன்னொரு தலைமுறை வருது இல்ல. வறிய நாடுகளுக்கு எங்கட சாமானக் குடுத்தா கூட சம்பளம் குடுக்க ஏலா. செல்வந்த நாடு எண்டா, நல்ல சம்பளம் குடுக்கலாம். உதாரணத்துக்கு நோர்வேக்கு ஒரு "சேர்ட்' செஞ்சி குடுத்தா 8 ஆயிரம் ரூபா தருவாங்க' என்றார்.

சர்வதேசத்திலேயே இவர்களது உற்பத்திகளுக்கு அதிகளவான சந்தை வாய்ப்புகள் இருப்பதாகவும் போதியளவான மனிதவளம் இல்லாமையால் அவர்கள் கேட்கின்ற தொகையை தன்னால் உற்பத்தி செய்யமுடியால் போய்விட்டதாகவும் கூறி நொந்து கொண்டார்.



"இதுக்குள்ள புதிய இளம் பிள்ளயல் வாறங்க இல்ல. இப்ப இரிக்கிறவங்க கைத்தொழில் எண்டா, அத கௌரவக் குறச்சலாத்தான் நெனக்கிறாங்க. இதுல நல்ல எதிர்காலம் இருக்கு. ஆனா, யாரும் முன்வாறாங்க இல்ல. இந்த தலைமுறையோடயே இந்தத் தொழில் நின்டாலும் ஆச்சரியப்பட ஏலா. நானும் திருக்கோவில், விநாயகபுரம், சத்துருக் கொண்டான் எண்டு பல இடங்களுக்கும் பிள்ளயலுக்கு ரெயினிங்க குடுத்தேன். ஆனா, அங்க மூலப்பொருள் எடுக்குற வசதி இல்ல. அதுகள் இங்கதான் வரவேண்டிக் கெடக்கு. அதால அந்தத்தொழில் இங்கயோடயே நிக்குது. அவங்களுக்கும் ஆர்வம் குறஞ்சி போச்சி' என்று தனது ஆதங்கத்தை எம்மிடம் கொட்டித்தீர்த்தார்.


என்னிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவரது கைத்தறி இயந்திரங்களை அறிமுகப்படுத்தினார். அந்நேரத்தில் அவரிடம் வேலைசெய்கின்றவர்கள் வேலை முடித்துவிட்டு வீடு சென்றுவிட்டார்கள். அவர்களுக்கு நாட் சம்பளம் இல்லாமல், உற்பத்திகளுக்கே கூலி கொடுப்பதால் அதிகநேரம் இருப்பதில்லை. ஆரம்பகாலத்தில் பயன்படுத்திய தறிவகைகளையும் அங்கு காணக்கூடியதாக இருந்தது. வேலைசெய்கின்ற அனைத்து கைத்தறிகளையும் தானே சுயமாக உரு வாக்கியதாகக் கூறும்போது வியந்து போனேன்.


அவர் இத்தொழிலின் சந்தைப்படுத்தல் பற்றிக் கூறும்போது; "நான் 850 ரூபாக்கு கொம்பனிக்கு சாரம் குடுக்குறன். அவங்க அத 1300 ரூபாக்கு விக்கிறாங்க. சுனாமிக்கு முதல்ல இலங்க அரசாங் கத்துக்கு வருசம் ஒண்டுக்கு ரெண்டாயிரம் சாரிகள் 13 லெச்சம் ரூபாக்கு நான் குடுத்து வந்தன். இப்ப சாமா னுக்கு வில கூட. ஆனா, அவங்க அதே விலைக்கி கேக்குறதால நான் இப்ப குடுக்கிறதில்ல. என்கிட்ட 4 ஆம்புளயலும் 6 பொம்புளயலும் வேல செய்றாங்க. அவங்களுக்கு தறியடிக்குறதுக்கு 1 மீற்றருக்கு 75 ரூபா குடுக்கிறன்' என்றார்.


இவரது அனுபவம், கலைத்திறன் போன்றவற்றால் நோர்வே, இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளார். அங்கு இவர் விசேடமான பல பயிற்சிகள், தொழில்நுட்பங்கள், தொழில்விருத்திகளையும் பெற்றுக்கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாது இலங் கையில் நடைபெற்ற பல கைத்தொழில் கண்காட்சிகளில் இவருக்குப் பல விருதுகளும் சான்றிதழ்களும் கிடைத்துள்ளன.


இலங்கை அரசாங்கம் நூலை இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக இறக்குமதி செய்து நியாயமான விலைக்கு தரவேண்டும் என்று பொதுவானதொரு கைத்தறியாளர் என்றவகையில் கேட்டுக்கொண்டார். மருதமுனையில் நெசவுத்தொழிலை அழியவிடாமல் பாதுகாக்க பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார் ஒஸனார். ஆகவே, இதன் பெறுமதியை உணர்ந்து நெசவுத் தொழிலை மருதமுனை மட்டு மல்லாது நாடுபூராவும் ஊக்குவிக்கவேண்டியது கட்டாயமானது.



நன்றி: இருக்கிறம்

சனி, 17 செப்டம்பர், 2011

உலகில் அடர்த்தியான முடியுடைய பெண்


உலகில் மிகவும் அடர்த்தியான முடியான 4 அடி 4 அங்குலம் (1.32 மீற்றர்) சுற்றளவுடையது. இந்த முடியை வளர்த்தெடுக்க 12 ஆண்டுகள் சென்றுள்ளதாம்.

அது இப்போது ஒரு பாரம்பரிய சேர்த்திருக்கிறது விட பெரிய இருக்கிறது மற்றும் புதிய ஆர்லியன்ஸ் மிக பெரிய 36 வயதான சமூக தொழிலாளி கூட உலகின் குறுகிய மனிதன் உள்ளே பொருந்தும் முடியும்!

அவர் இதுதொடர்பாக கருத்துக்கூறுகையில், ஒருமுறை அவர் கார் கதவை திறந்தபோது மக்கள் முண்டியடித்துக்கொண்டு எனது முடியைத் தொடுவதற்கு அனுமதி கேட்டனர். அப்போது எனக்கு வெறுப்புத்தான் வந்தது. தூங்கும் போது நான் செளகரியமான தலையணையை வழங்குகிறேன் என்றார்.



உலகில் மிகநீளமான நாக்குடைய பெண்



கலிபோர்னியாவைச் சேர்ந்த 21 வயதுடைய சனல் டப்பர் என்ற மாணவி உலகில் மிகநீளமான நாக்குக்குடையவரார். சுமார் 9.75 சென்றி மீற்றர் நீளமுடையது அவருடைய நாக்கு. இவரது நாக்கு கின்னஸ் சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உலக கின்னஸ் சாதனைகள் புத்தகத்தின் தலைமை ஆசிரியர் கிரேக் க்ளெண்டே கூறுகையில்;
"கின்னஸ் உலக சாதனைகள் 2012 இல் அசாதாரண பதிவுகள் பலதைக் கொண்டிருக்கும். மக்களிடம் இதற்கு மிகுந்த வரவேற்புக் கிடைக்கும்" என்றார்.

வியாழன், 15 செப்டம்பர், 2011

தினக்குரல் ஆசிரியர்பீடத்துக்கு இலவச சம்பளம் வழங்க உறுதி


வீரகேசரியின் நிர்வாகத்தின் கீழுள்ள ஏஷியன் மீடியா பப்ளிகேஷன் பிரைவேட் லிமிட்டட்டிலிருந்து கடந்த ஜூலை முதலாம் திகதி முதல் வெளிவந்த தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த 25 ஊழியர்கள் புதன்கிழமை காலை அலுவலகத்துக்கள் நழையவிடாது நிர்வாகத்தினரால் தடுத்த நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். 

தினக்குரலின் செய்தி ஆசிரியர், தினக்குரல் வார வெளியீடு பிரதம ஆசிரியர், உதவி செய்தி ஆசிரியர், சிரேஷ்ட உதவி ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். நிர்வாகத்தினரால் உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து இந்த ஊடகவியலாளர்கள் தமது நிலை குறித்து பொலிஸ் திணைக்களத்திடம் முறையிட்டனர். அத்துடன் கொழும்பு 15இல் உள்ள மோதரை தொழில் நிலையத்திடமும் முறையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட தினக்குரல் ஆசிரிய பீடத்தினரை தொழில் திணைக்களத்தின் கொழும்பு வடக்கிற்கு பொறுப்பான தொழில் ஆணையாளர் விக்கிரமசிங்க விசாரரைணக்கு அழைத்திருந்தார். அத்துடன் நிர்வாகத்தினரை விசாரணைக்கு அழைத்தபோது அவர்கள் சமூகம் கொடுக்கவில்லை. இதனையடுத்து தினக்குரல் ஆசிரியர் பீடத்தினரிடமிருந்து முறைப்பாட்டைப் பெற்றுக்கொண்ட உதவி ஆணையாளர் வியாழக்கிழமை 10.30 மணிக்கு நிர்வாகத்தினரை கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பணித்துள்ளார்.


அத்துடன் தொலைபேசி ஊடாக தினக்குரல் நிர்வாக இயக்குநர் P.கேசவராஜாவைத் தொடர்பு கொண்ட உதவி ஆணையாளர் தினக்குரல் ஊழியர்களிடம் இராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்குமாறு கோரமுடியாது எனத் தெரிவித்ததுடன் ஊழியர்களை உடனடியாக அலுவலகத்தக்குள் அனுமதிக்குமாறு கூறியபோதும் P.கேசவராஜா அதற்கு மறுத்துவிட்டார். ஏனெனில் இது வீரகேசரி நிர்வாகத்தின் முடிவு எனக் கூறிய அவர் அவர்களின் முடிவின்படியே  தன்னால் செயற்படமுடியும் எனவும் கூறிவிட்டார்.

இலங்கையில் முதன்முதலாக ஒரு பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் நிர்வாகத்தினரால் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். ஊடகவியலாளர் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் இலங்கையிலுள்ள பல ஊடக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் தமது பூரண ஆதரவையும் தினக்குரல் ஊடகவியலாளர்களுக்கு வழங்கியுள்ளனர்.

தினக்குரல் ஊடகவியலாளர்கள் மீண்டும் அனுமதிக்கப்படாத பட்சத்தில் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு சிங்கள ஊடகவியலாளர்கள் உட்பட பொது அமைப்பபுகள் பலவும் முன்வந்துள்ளன. இச்சட்டவிரோதமான நடவடிக்கைக்கு இடம்கொடுத்தால் இலங்கையின் ஊடகவியலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே அமையும்.


இதையடுத்து இன்று வியாழக்கிழமை இரு தரப்பினருடனும் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கு வருமாறு உதவி தொழில் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய தினக்குரல் ஆசிரியர்பீட உத்தியோகத்தர்கள் கொழும்பு தொழில் திணைக்களத்திற்கு ஆஜரானபோது அங்கு விசாரணைகள் இடம்பெற்றது. 

அங்கு தினக்குரல் நிறுவுநர் எஸ்.பி. சாமி அவர்கள் தினக்குரல் ஆசிரியர்பீட உத்தியோகத்தர்களை புளூமென்டெல் தினக்குரல் அச்சகத்தில் சும்மா வந்திருக்குமாறும் அவர்களுக்கு சம்பளத்தொகையை வழமைபோல தருவதாகவும் கூறியுள்ளார். தொழில் திணைக்களம் எதிர்வரும் 21ஆம் திகதி இவர்களுக்கான காலக்கெடுவைக் கொடுத்துள்ளதாகவும் எமது துருவம் இணையத்தளத்‌துக்கு செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

19 அடி நீளமான நகமுடைய பெண் சாதனை


கிறிஸ் "டட்சஸ்" வால்டன் என்ற பெண்மணி சமீபத்தில் உலகின் மிக நீண்ட கைவிரல் நகமுடையவர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். நகம் அவரது இடது கையில் 10 அடிக்கும் வலது கையில் 9 அடிக்கும் மேல் உள்ளன. சாதனை படைப்பது இப்போது சர்வசாதரணமாகிவிட்டது. இவரைப்பார்த்து மனதில் எழுந்த கேள்விகளில் சில...


01. எப்படி அந்த நீண்ட நகங்களை வைத்துக்கொண்டு தூங்கமுடியும்?
02. எப்படி கழிவறையில் நடந்துகொள்வார்?
03. சாப்பிட ஏதாவது மிசின் ஏதும் வைத்திருக்கிறாரா?

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites